உங்கள் கணக்கை எவ்வாறு செயல்முடக்கம் செய்வது

X -இலிருந்து சற்று விலக விரும்புகிறீர்களா? எங்களுக்குப் புரிகிறது. சில நேரங்களில், நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் சற்று விலகி இருப்பது நல்லது. அல்லது நீங்கள் நிரந்தரமாக விலகி இருக்க விரும்பினால், அதற்கும் எங்களால் உதவ முடியும். உங்கள் X கணக்கை எவ்வாறு செயல்முடக்கம் செய்வது அல்லது நீக்குவது என்பது குறித்த எங்களின் படிப்படியான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

குறிப்பு: உங்கள் கணக்கில் சிக்கல் இருந்தால் (எ.கா. கீச்சுகளைக் காணவில்லைஉங்களைப் பின்தொடர்பவர் அல்லது நீங்கள் பின்தொடர்வோர் குறித்த தவறான எண்ணிக்கைகள்சந்தேகத்திற்கிடமான நேரடிச்செய்திகள் அல்லது சாத்தியமான கணக்குத் திருடப்படுதல்), உங்கள் கணக்கைச் செயல்முடக்கம் செய்து மீண்டும் செயல்படுத்துவது அதைத் தீர்க்காது. எங்களின் சரிசெய்தல் கட்டுரைகளைப் பார்க்கவும் அல்லது X ஆதரவைத் தொடர்பு கொள்ளவும்.

 

உங்கள் Twitter கணக்கைச் செயல்முடக்குவதற்கும், நீக்குவதற்குமான வித்தியாசம்

உங்கள் Twitter கணக்கைச் செயல்முடக்குவது உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான முதல் படியாகும். செயல்முடக்கம் 30 நாட்கள் நீடிக்கும். 30 நாள் செயல்முடக்கக் காலத்திற்குள் உங்கள் கணக்கை நீங்கள் அணுகவில்லை எனில், உங்கள் கணக்கு நீக்கப்படும், மேலும் உங்கள் பயனர்பெயர் உங்கள் கணக்குடன் இணைக்கப்படாது.
 

 

உங்கள் Twitter கணக்கைச் செயல்முடக்குதல்

செயல்முடக்குவது என்பது உங்கள் Twitter கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான செயல்முறையைத் தொடங்குகிறது. இந்தப் படியானது 30 நாள் என்ற கெடுவைத் தொடங்குகிறது, இது உங்கள் கணக்கை மீண்டும் இயக்க விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு இடமளிக்கும்.

உங்கள் Twitter கணக்கைச் செயல்முடக்கினால் உங்கள் பயனர்பெயரையும் (அல்லது "பயனர் அடையாளம்") பொது சுயவிவரத்தையும் twitter.com, iOS -க்கான Twitter அல்லது Android -க்கான Twitter -இல் பார்க்க முடியாது. 
 

 

உங்கள் Twitter கணக்கை நீக்குதல்

உங்கள் 30 நாள் செயல்முடக்கக் காலத்திற்குப் பிறகு, உங்கள் Twitter கணக்கு நிரந்தரமாக நீக்கப்படும். இந்த 30 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் நீங்கள் உள்நுழையவில்லை எனில், அது உங்கள் Twitter கணக்கை நிரந்தரமாக நீக்க விரும்புகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கும். உங்கள் கணக்கு நீக்கப்பட்டதும், உங்கள் கணக்கு எங்கள் கணினிகளில் இருக்காது. உங்களால் உங்கள் முந்தைய கணக்கை மீண்டும் செயல்படுத்த முடியாது, மேலும் பழைய கீச்சுகள் எதையும் அணுக முடியாது.

30 நாள் செயல்முடக்கக் காலத்திற்குப் பிறகு உங்கள் கணக்கு நீக்கப்பட்டதும், உங்கள் பயனர்பெயர் மற்ற Twitter கணக்குகள் மூலம் பதிவு செய்வதற்குக் கிடக்கும்.

 

உங்கள் கணக்கைச் செயல்முடக்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

உங்கள் Twitter கணக்கைச் செயல்முடக்க அல்லது நீக்க நீங்கள் தீர்மானித்தால், நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன்:

  • உங்கள் Twitter கணக்கை நீக்குவது Google அல்லது Bing போன்ற தேடுபொறிகளிலிருந்து உங்கள் தகவலை நீக்காது, ஏனெனில் அந்தத் தளங்களை Twitter கட்டுப்படுத்தாது. நீங்கள் தேடுபொறியைத் தொடர்பு கொண்டால் நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் உள்ளன.
  • உங்கள் Twitter கணக்கைச் செயல்முடக்கும் போது, பிறரின் கீச்சுகளில் உங்கள் கணக்கு பயனர்பெயரின் குறிப்பீடுகள் அப்படியே இருக்கும். இருப்பினும், உங்கள் சுயவிவரம் இனி கிடைக்காது என்பதால் இது உங்கள் சுயவிவரத்துடன் இணைக்கப்படாது. நீங்கள் Twitter விதிகளின் கீழ் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், டிக்கெட்டை இங்கே தாக்கல் செய்யலாம்.
  • உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய பயனர்பெயர் அல்லது மின்னஞ்சலை மாற்ற, உங்கள் கணக்கை நீக்க வேண்டியதில்லை. கணக்குத் தகவலை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்க, கணக்குத் தகவலுக்குச் செல்லவும்.
  • 30 நாள் என்ற செயல்முடக்கக் காலத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைவது உங்கள் கணக்கை எளிதாக மீட்டெடுக்கும்.
  • உங்கள் Twitter தரவை நீங்கள் பதிவிறக்க விரும்பினால், உங்கள் கணக்கைச் செயல்முடக்குவதற்கு முன் அதைக் கோர வேண்டும். உங்கள் கணக்கைச் செயல்முடக்குவது Twitter கணினிகளில் இருந்து தரவை அகற்றாது.
  • Twitter அதன் இயங்குதளம் மற்றும் Twitter -ஐப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, செயல்முடக்கப்பட்ட உங்கள் கணக்குக் குறித்த சில தகவலை வைத்திருக்கலாம். கூடுதல் தகவலை இங்கே காணலாம்.
     

உங்கள் Twitter கணக்கை நிர்வகிப்பதில் உங்களுக்குச் சிக்கல் இருந்தால், உங்கள் Twitter கணக்கை நீக்குவதற்கு முன்பு, பொதுவான சிக்கல்களை நிர்வகிப்பதை குறித்த இந்த உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்.

 
உங்கள் கணக்கை எவ்வாறு செயல்முடக்கம் செய்வது
படி 1

வழிசெலுத்தல் மெனு ஐகானை தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 3

கணக்குச் செயல்முடக்குதல் தகவலை வாசித்து, செயல்முடக்கு என்பதைத் தொடவும்.  

படி 4

கேட்கப்படும்போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, செயல்முடக்கு என்பதைத் தொடவும்.

படி 5

ஆம், செயல்முடக்கு என்பதைத் தொடுவதன் மூலம் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 2

கணக்கு என்பதைத் தொட்டு, உங்கள் கணக்கைச் செயல்முடக்கவும் என்பதைத் தொடவும்.

படி 3

கணக்குச் செயல்முடக்குதல் தகவலை வாசித்து, செயல்முடக்கு என்பதைத் தொடவும்.  

படி 4

கேட்கப்படும்போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, செயல்முடக்கு என்பதைத் தொடவும்.

படி 5

ஆம், செயல்முடக்கு என்பதைத் தொடுவதன் மூலம் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

படி 1

மேலும் என்னும் ஐகானில்  கிளிக் செய்து, கீழிறங்கும் மெனுவிலிருந்து அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2

உங்கள் கணக்கு என்ற தாவலிலிருந்து, உங்கள் கணக்கைச் செயல்முடக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3

கணக்குச் செயல்முடக்குதல் தகவலை வாசித்துசெயல்முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4

கேட்கப்படும்போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, கணக்கைச் செயல்முடக்கு என்ற பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.


நீங்கள் X-ஐ மீண்டும் பயன்படுத்த நினைத்து, அது 30 நாட்களுக்கும் குறைவாக இருந்தால், உங்கள் கணக்கில் உள்நுழையவும், மேலும் அதை மீண்டும் செயல்படுத்த இந்தப் படிகளைப் பின்பற்றவும்.
 

 

சப்ஸ்கிர்ப்ஷன்கள் மற்றும் கணக்கு செயல்முடக்கம் 

உங்கள் X கணக்கை செயல்முடக்குவது X சப்ஸ்கிர்ப்ஷனை தானாகவே ரத்து செய்யாது. X பயன்பாட்டின் மூலம் வாங்கப்பட்ட ஏதேனும் செயலிலுள்ள கட்டண சப்ஸ்கிர்ப்ஷன்கள் (எ.கா., X Blue, சூப்பர் ஃபாலோஸ்) உங்களிடம் இருந்தால், அவை செயலில் இருக்கும். நீங்கள் முதலில் சப்ஸ்கிரைப் செய்த இயங்குதளத்தின் மூலம் இந்த சப்ஸ்கிர்ப்ஷன்களை நிர்வகிக்கலாம். X.com -இல் வாங்கிய சப்ஸ்கிர்ப்ஷன்கள் உங்கள் கணக்கை செயலிழக்கச் செய்த பிறகு தானாகவே ரத்து செய்யப்படும்.

X Blue சப்ஸ்கிர்ப்ஷனை எப்படி ரத்து செய்வது

சூப்பர் ஃபாலோஸ் சப்ஸ்கிர்ப்ஷனை எப்படி ரத்து செய்வது

 

செயல்முடக்குதல் FAQகள்

Twitter-ஐச் செயல்முடக்கினால் எனது நேரடிச்செய்திகளும் நீக்கப்படுமா?

30 நாள் என்ற செயல்முடக்கக் காலத்தில் உங்கள் நேரடிச்செய்திகள் நீக்கப்படாது. செயல்முடக்கக் காலம் முடிந்து, உங்கள் கணக்கு நீக்கப்படும் போது, நீங்கள் அனுப்பிய நேரடிச்செய்திகளும் நீக்கப்படும்.

எனது கணக்கை நான் செயல்முடக்கினேன், ஆனால் ஏன் அது மீண்டும் செயல்படுத்தப்படுகிறது?

உங்கள் கணக்கை அணுகுவதற்கு ஏதேனும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை நீங்கள் அங்கீகரித்திருந்தால், நீங்கள் வேறொரு பயன்பாட்டிலிருந்து மறைமுகமாக உள்நுழைந்திருக்கலாம். Twitter-இல் உள்நுழைவது தானாகவே உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்துவதால், உங்கள் Twitter கணக்கிற்கான மூன்றாம் தரப்பு பயன்பாட்டு அணுகலை ரத்துசெய்வதை உறுதிசெய்யவும்.

நான் செயல்முடக்க முயற்சிக்கும்போது என்னிடம் கடவுச்சொல் இல்லை என்றால் என்ன செய்வது?

உங்களுக்கு அது எளிதாக இல்லையெனில் அல்லது அது தவறு என்ற செய்தியை நீங்கள் பெற்றால், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டியிருக்கும். கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சலைக் கோர முயற்சிக்கவும்.

கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சலைக் கோரினேன், ஆனால் எனது கணக்கை அமைக்கப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிக்கான அணுகலை நான் இழந்தால் என்ன செய்வது?

உங்கள் Twitter கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கான அணுகலை நீங்கள் இழந்தால், உங்கள் மின்னஞ்சல் சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை அணுகுவதற்கு உதவி பெறவும் செயல்முடக்குவது என்பது உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவரால் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவரின் கோரிக்கையின் பேரில் எடுக்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகும். உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து எங்களை நீங்கள் தொடர்பு கொள்ள முடியாவிட்டால் (அல்லது கணக்கில் சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்ணுக்கான அணுகல் இல்லாவிட்டால்), உங்கள் சார்பாகக் கணக்கைச் செயல்முடக்க முடியாது. உங்கள் கணக்கில் சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்ணுக்கான அணுகல் உங்களிடம் இருந்தால், கடவுச்சொல் மீட்டமைப்பைக் கோரலாம்.

எனது பூட்டப்பட்ட அல்லது இடைநீக்கப்பட்ட கணக்கை எவ்வாறு செயல்முடக்குவது?

உங்களின் இடைநீக்கப்பட்ட அல்லது பூட்டப்பட்ட கணக்கை செயல்முடக்க, இங்கே ஒரு கோரிக்கைச் சமர்ப்பிக்கவும். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் "எங்களை எப்படித் தொடர்புகொள்வது" என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புகளுக்கும் கோரிக்கைகளை அனுப்பலாம்.

உங்கள் கணக்கைத் திறப்பதற்கான உதவியையும் நீங்கள் பெறலாம். முறையீட்டை தாக்கல் செய்தல் உட்பட, பூட்டப்பட்ட அல்லது இடைநீக்கப்பட்ட உங்கள் கணக்கை நிர்வகிப்பது பற்றிய கூடுதல் தகவலைப் பெறுங்கள்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க