இழந்துவிட்ட அல்லது மறந்துவிட்ட Twitter கடவுச்சொல்லை எவ்வாறு கண்டறிவது

மின்னஞ்சல் முகவரி மற்றும்/அல்லது தொலைபேசி எண்ணைத் துல்லியமாகவும் புதுப்பித்த நிலையிலும் வைத்திருப்பது, உங்கள் கணக்கிற்கான அணுகலை நீங்கள் ஒருபோதும் இழந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு மேற்கொள்ளும் சிறந்த வழியாகும். உங்கள் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி மற்றும்/அல்லது தொலைபேசி எண் புதுப்பித்த நிலையில் உள்ளதைச் சரிபார்த்து உறுதிசெய்யவும்.

நீங்கள் உள்நுழைந்துள்ள போது, கடவுச்சொல்லை மாற்றுவது எவ்வாறு

 1. உள்நுழைந்துள்ள கணக்கிலிருந்து, வழிகாட்டுதல் பட்டியில் உள்ள மேலும்   என்னும் சின்னத்தில் கிளிக் செய்து, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்வுசெய்யவும்.
 2. கணக்கு என்ற தாவலிலிருந்து கடவுச்சொல் என்பதில் கிளிக் செய்யவும்.
 3. உங்கள் தற்போதைய கடவுச்சொல்லை உள்ளிடவும்.
 4. புதிய கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும்.
 5. சேமி என்பதை கிளிக் செய்வதன் மூலம் மாற்றங்களைச் சேமிக்கவும்.

Note: உங்களால் உள்நுழைய முடிகிறது ஆனால் கடவுச்சொல் மறந்துவிட்டது எனில், கடவுச்சொல் அமைப்புகள் பக்கத்திலிருந்து கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சலை உங்களுக்கு நீங்கள் அனுப்பலாம்.

மின்னஞ்சல் மூலமாகக் கடவுச்சொல் மீட்டமைப்பை உங்களுக்கு அனுப்புவது எவ்வாறு

 1. twitter.com அல்லது mobile.twitter.com -இன் உள்நுழைதல் பக்கத்திலிருந்து அல்லது iOS அல்லது Android பயன்பாட்டிற்கான Twitter –இலிருந்து கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? என்பதைக் கிளிக் செய்யவும்.
 2. உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது Twitter பயனர்பெயரை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி எண்ணுடன் பல கணக்குகள் தொடர்புப்படுத்தப்பட்டிருந்தால், இந்தப் படிநிலையின் போது, தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த முடியாது.
 3. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சலைப் பெற விரும்பும் மின்னஞ்சல் முகவரியைத் தேர்வுசெய்யவும்.
 4. உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸைப் பார்க்கவும். Twitter உடனடியாக உங்கள் கணக்கின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தகவலை அனுப்பும்.
 5. அந்த மின்னஞ்சலில் உள்ள மீட்டமைப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 6. புதிய கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும்.

Note: இந்த மின்னஞ்சல்களில் உள்ள கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்புகள் நேர வரம்புடையவை. இணைப்பில் கிளிக் செய்து அது வேலை செய்யவில்லை எனில், புதிய ஒன்றைக் கோர முயற்சித்து, முடிந்தளவு விரைவாக இணைப்பைப் பயன்படுத்தவும்.

SMS மூலமாக கடவுச்சொல் மீட்டமைப்பை உங்களுக்கு அனுப்பவது எவ்வாறு

மொபைல் அமைப்புகளில், உங்கள் கணக்குடன் தொலைபேசி எண்ணைச் சேர்த்திருந்தால், SMS/உரைச்செய்தி வழியாகக் கடவுச்சொல் மீட்டமைப்பைப் பெறலாம்.

 1. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? என்னும் பக்கத்திலிருந்து, உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது Twitter பயனர்பெயரை உள்ளிடவும்.
 2. தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, தேடுக என்பதில் கிளிக் செய்யவும்.
 3. [XX] என முடியும் எனது தொலைபேசி எண்ணிற்குக் குறியீட்டை அனுப்புக எனும் செய்தி தோன்றும். தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. 15 நிமிடங்களுக்குச் செல்லுபடியாகும் ஆறு-இலக்கக் குறியீட்டை Twitter உங்களுக்கு அனுப்பும்.
 5. கடவுச்சொல் மீட்டமைப்புப் பக்கத்தில், உரைப் புலத்தில் இந்தக் குறியீட்டை உள்ளிட்டு, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
 6. புதிய கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.

Note: உள்நுழைதல் சரிபார்ப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள கணக்குகளுக்கு SMS மூலமான கடவுச்சொல் மீட்டமைப்பு கிடைக்கவில்லை. மின்னஞ்சல் மூலமாக மட்டுமே உங்களின் கடவுச்சொல்லை மீட்டமைக்க முடியும்.

SMS குறியீட்டைப் பெறவில்லையா?

கடவுச்சொல் மீட்டமைப்பைக் கோருவதற்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படுகிறது

நீங்கள் கோராத போதும், கடவுச்சொல் மீட்டமைப்புச் செய்திகளை அடிக்கடி பெற்றால், கடவுச்சொல் மீட்டமைப்பைத் தொடங்குவதற்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படலாம்.

 1. twitter.com மூலமாக, உங்கள் கணக்கு அமைப்புகளுக்குச் செல்லவும்.
 2. பாதுகாப்புப் பிரிவின் கீழ், கடவுச்சொல் மீட்டமைப்புப் பாதுகாப்பு என்பதற்குப் பக்கத்திலுள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். 
 3. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல் அல்லது SMS/உரையை அனுப்புவதற்கு, உங்கள் கணக்கின் மின்னஞ்சல் முகவரிஅல்லது தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும்.
  • மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் இரண்டும் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல் அல்லது SMS/உரையை அனுப்புவதற்கு அவை இரண்டையும் உள்ளிட வேண்டும்.

Bookmark or share this article