எவ்வாறு உங்கள் Twitter பயனர்பெயரை மாற்றுவது

உங்கள் பயனர்பெயர் –– உங்கள் பயனர் அடையாளம் என்றும் அறியப்படுகிறது –– "@" குறியீடுடன் தொடங்குகிறது, இது உங்கள் கணக்கிற்குத் தனித்துவமானது, மேலும் இது உங்கள் சுயவிவர URL -இல் தோன்றும். உங்கள் பயனர்பெயர் உங்கள் கணக்கில் உள்நுழையப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது பதில்கள் மற்றும் நேரடிச்செய்திகளை அனுப்பும்போதும் பெறும்போதும் புலப்படும். உங்கள் பயனர்பெயர் மூலமும் பயனர்கள் உங்களைத் தேடலாம். 

குறிப்பு: உங்களின் காட்சிப் பெயர் –– பெயர் எனக் குறிப்பிடப்படுகிறது –– இது Twitter இல் தனிப்பட்ட அடையாளங்காட்டியாகும், மேலும் உங்கள் பயனர்பெயரிலிருந்து தனிப்பட்டது. இது விளையாட்டுத்தனமான, வணிகப் பெயர் அல்லது உண்மையான பெயர் போன்ற விஷயங்களாக இருக்கலாம், மேலும் இது உங்கள் பயனர்பெயருக்கு அடுத்ததாகக் காட்டப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பெயரைப் புதுப்பிக்கலாம்.

பயனர்பெயர்கள் மற்றும் பெயர்கள் எவ்வளவு காலம் இருக்க முடியும்?
  • உங்கள் பயனர்பெயரில் 4 எழுத்துகளுக்கு மேல் இருக்க வேண்டும், மேலும், 15 எழுத்துக்கள் வரை அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம்.

  • உங்கள் பயனர்பெயரில் எழுத்துக்கள், எண்கள் மற்றும் அடிக்கோடிட்டிகள் மட்டுமே இருக்க முடியும்—இடைவெளிகள் எதுவும் அனுமதிக்கப்படாது.

  • உங்கள் காட்சிப் பெயரில் 50 எழுத்துகள் வரை இருக்கலாம்.

உங்களின் பயனர்பெயரை எவ்வாறு மாற்றுவது
படி 1

அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் சென்று, கணக்கு என்பதைத் தொடவும்.

படி 2

பயனர்பெயர் என்பதைத் தொட்டு, பயனர்பெயர் புலத்தில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள பயனர்பெயரைப் புதுப்பிக்கவும். பயனர்பெயர் வேறொருவரால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால், வேறொன்றைத் தேர்வுசெய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.

படி 3

முடிந்தது என்பதைத் தொடவும்.

படி 1

அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் சென்று, கணக்கு என்பதைத் தொடவும்.

படி 2

பயனர்பெயர் என்பதைத் தொட்டு, பயனர்பெயர் புலத்தில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள பயனர்பெயரைப் புதுப்பிக்கவும். பயனர்பெயர் வேறொருவரால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால், வேறொன்றைத் தேர்வுசெய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.

படி 3

முடிந்தது என்பதைத் தொடவும்.

படி 1

வழிசெலுத்தல் பட்டியில் உள்ள மேலும்  என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். 

படி 2

அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதில் கிளிக் செய்யவும்.

படி 3

உங்கள் கணக்கு என்பதில் கிளிக் செய்யவும்.

படி 4

கணக்குத் தகவல் என்பதில் கிளிக் செய்யவும்.

படி 5

நீங்கள் தான் என்பதை உறுதிப்படுத்த உங்கள் Twitter கணக்கு கடவுச்சொல்லை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.

படி 6

கணக்குத் தகவல் என்பதன் கீழ், பயனர்பெயர் புலத்தில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள பயனர்பெயரைப் புதுப்பிக்கவும். பயனர்பெயர் வேறொருவரால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால், வேறொன்றைத் தேர்வுசெய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.

படி 7

சேமி என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.


குறிப்பு: பயனர்பெயரை மாற்றுவதனால், ஏற்கனவே உள்ள உங்களின் பின்தொடர்பவர்கள், நேரடிச்செய்திகள் அல்லது பதில்கள் எதுவும் பாதிக்கப்படாது. நீங்கள் புதுப்பிக்கும் போது, உங்களைப் பின்தொடர்பவர்கள் உங்கள் சுயவிவரப் படத்திற்கு அடுத்தததாகப் புதிய பயனர்பெயரைக் காண்பார்கள். உங்கள் பயனர்பெயரை மாற்றுவதற்கு முன் உங்களின் பின்தொடர்பவர்களை எச்சரிக்குமாறு பரிந்துரைக்கிறோம், இதனால் அவர்கள் உங்களின் புதிய பயனர்பெயருக்குப் பதில்களை அல்லது நேரடிச்செய்திகளை அனுப்ப முடியும். கூடுதலாக, உங்கள் பயனர்பெயரை நீங்கள் மாற்றியவுடன், உங்களின் முந்தைய பயனர்பெயர் உடனடியாக வேறொருவரின் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் விரும்பும் பயனர்பெயர் எடுக்கப்பட்டதா அல்லது செயலற்றதா? பயனர்பெயரைப் பதிவு செய்தல் பற்றிய எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க