Twitter-ஐ எவ்வாறு பாதுகாப்பானதாக்குகிறோம்
உரையாடல்களுக்கான சிறந்த இடத்தை உருவாக்குகிறோம்.
உங்கள் தனித்துவமான குரல்களும் உரையாடல்களுமே Twitter-ஐ Twitter ஆக்குபவை. அதனால், பொதுவான உரையாடல்களில் அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கலாம் என்பதை உறுதிசெய்வதற்காக எங்கள் விதிகள், செயல்கள், தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.
Twitter-இல் பாதுகாப்பை உணர்வதற்கு உங்களுக்குத் தகுதியுள்ளது — அதை நிகழ்த்துவதுதான் எங்கள் வேலை.
செயல்திறனுடன் கண்டறிதல்
எங்கள் விதிகளை மீறும் கீச்சுகளை நீங்கள் புகாரளிக்கும் முன், அவற்றைச் செயல்திறனுடன் கண்டறிந்து கொடியிடுவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
கணக்குகளைத் தடைசெய்க
உங்கள் கீச்சுகளை யாராவது பார்ப்பதை நீங்கள் விரும்பாத பட்சத்தில் மற்றும் அவர்களுடைய கீச்சுகளை நீங்கள் பார்க்க விரும்பாத பட்சத்தில் எந்தவொரு கணக்கையும் உடனடியாகத் தடைசெய்யுங்கள்.
தவறான நடத்தையைப் புகாரளிக்கவும்
தவறான நடத்தை நிகழ்ந்தால், அதை நீங்கள் எங்களுக்குப் புகாரளிக்க விரும்புகிறோம்.
கணக்குகளைச் செயல்மறைக்கவும்
நீங்கள் அவர்களின் கீச்சுகளைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் கணக்கைப் பின்தொடர்வதை நிறுத்த வேண்டாம் என்றால் கணக்கைச் செயல்மறைக்கலாம்.
சொற்களைச் செயல்மறைக்கவும்
குறிப்பிட்ட சொற்களை செயல்மறைப்பதன் மூலம் நீங்கள் பார்க்க விரும்பாத தலைப்புகளைத் தவிர்க்கவும்.
உரையாடல்களைச் செயல்மறைக்கவும்
நீங்கள் பங்கேற்றிருக்கும் ஒரு கீச்சு குறித்த அறிவிப்புகளை நிறுத்த, உரையாடலைச் செயல்மறைக்கவும்.
அறிவிப்பு காலவரிசை வடிகட்டிகள்
உங்கள் அறிவிப்புகள் காலவரிசையில் நீங்கள் காணும் கணக்குகளின் வகைகளை வடிகட்டவும்.